திரிஷாவின் பாட்டியை அக்காவாக மாற்றிய அம்மணி

501887eb-08e8-43f5-b737-a37a4d40f66d_S_secvpfதமிழ் சினிமாவில் நடிகையாக வலம்வந்த லட்சுமி ராமகிருஷ்ணன், ‘ஆரோகணம்’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அப்படத்தை தொடர்ந்து, ‘நெருங்கி வா முத்தமிடாதே’ என்ற படத்தை எடுத்தார்.

தற்போது ‘அம்மணி’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் த்ரிஷாவின் பாட்டியாக நடித்திருந்த சுப்புலட்சுமி பாட்டி இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் இவரை பாட்டி என்று அழைத்தால் அவருக்கு பிடிக்காதாம். அதனால் 82 வயதான இவரை ‘அக்கா’ என்றுதான் படப்பிடிப்பில் உள்ளவர்கள் அனைவரும் அழைக்கிறார்களாம்.

அதற்கேற்றார்போல், தனது வயதையும் பொருட்படுத்தாது பகல்-இரவென பாராமல் பரபரவென ஷுட்டிங்கில் உற்சாகத்துடன் கலந்துகொள்வாராம்.

நிஜவாழ்க்கை கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு இக்கதை அமைந்துள்ளது. இப்படத்தை டாக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் வெண்கோவிந்தா தயாரிக்கிறார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online