காத்தம்மா – திரை விமர்சனம்

37c717f4-6f79-42cf-abfa-d7d695e5792d_S_secvpfஆதரவற்ற ஆறுமுகம் ஒவ்வொரு ஊராக சென்று கொலை, கொள்ளை, கற்பழிப்பு ஆகிய சம்பவங்களை செய்து வருகிறான். இதற்காக போலீஸ் ஆறுமுகத்தை தேடி வருகிறார்கள்.

ஒவ்வொரு ஊராக செல்லும் ஆறுமுகம் ஒரு மலை கிராமத்திற்கு செல்கிறான். அந்த கிராமத்தில் சக்தி-காத்தம்மா இருவரும் காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். சக்தி, சிறு வயதில் காணாமல் போன தன் அண்ணன் செல்வத்தை தேடி வருகிறார்.

இதை ஆறுமுகம் தெரிந்துக் கொள்கிறான். மேலும் காத்தாம்மாவை பார்த்தவுடன் அவளை அடைய நினைக்கிறான் ஆறுமுகம்.

இந்நிலையில் ஒரு சந்தர்ப்பத்தில் சக்தியை காப்பற்றி நான் தான் உன் அண்ணன் செல்வம் என்று கூறி அவர்கள் வீட்டில் தஞ்சம் அடைகிறான். பின்னர் காத்தம்மாவை அடைய பல வழிகளில் திட்டம் போடுகிறான். ஆனால் பல தடைகள் ஆறுமுகத்திற்கு வருகிறது.

இறுதியில் ஆறுமுகம் காத்தம்மாவை அடைந்தானா? போலீஸ் ஆறுமுகத்தை கண்டுபிடித்ததா? சக்தி-காத்தம்மாவுக்கு ஆறுமுகம் யார் என்று தெரிந்ததா? என்பதை படத்தின் மீதிக்கதை.

படத்தில் சக்தியாக நடித்திருக்கும் பிஜுராம், தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து யதார்த்தமாக நடித்திருக்கிறார். அண்ணன் மேல் பாசம், மனைவி மேல் உள்ள பாசம் என நடிப்பில் வித்தியாசம் காட்ட முயற்சித்திருக்கிறார்.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு என சைக்கோ வில்லனாக நடித்திருக்கிறார் அசோக் ராஜ். ஆறுமுகம், செல்வம் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆதிராவை அடைய இவர் செய்யும் முயற்சிகளில் இவருடைய முகபாவனைகள் ஏற்கும் படியாக இல்லை.

காத்தம்மாவாக நடித்திருக்கும் ஆதிரா, காதல் காட்சிகளில் ரசித்து நடித்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்சில் இவருடைய நடிப்பு பாராட்டும்படியாக இருக்கிறது.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்த எம்.டி.சுகுமார் இப்படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார். பாதிக்கப்பட்ட ஒரு பெண் பழிவாங்கும் கதையாக உருவாக்கியிருக்கிறார்.

குறைந்த கதாபாத்திரங்களை வைத்து படத்தை சுவாரஸ்யம் இல்லாமல் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். திரைக்கதைக்காக தேவையற்ற காட்சிகளை வேண்டுமென்று புகுத்தியது போல் இருக்கிறது. ஒரு சில காட்சிகள் ஏற்கும்படியாக இல்லை.

சுகுமாரே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். இவருடைய ஒளிப்பதிவில் எஸ்டேட்களை அழகாக படம்பிடித்து காண்பித்திருக்கிறார்.

ஜில்லன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘காத்தம்மா’ கவனமில்லை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries