நன்றி மறவாமல் சந்தானத்துக்கு உதவி செய்த உதயநிதி

3031099b-ba6d-4116-9f11-8252de80b06b_S_secvpfசந்தானமும்-உதயநிதி ஸ்டாலினும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. உதயநிதி அறிமுகமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் முதல் அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘நண்பேன்டா’ படம் வரை வெற்றி பெறுவதற்காக சந்தானம் மிகப்பெரிய உறுதுணையாக இருந்து வந்துள்ளார்.

அந்த நன்றிக்கு கைமாறு செய்யும் வகையில் உதயநிதி தற்போது சந்தானத்துக்கு கைகொடுத்து உதவியுள்ளார். அதாவது, சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘இனிமே இப்படித்தான்’ படம் இந்த வாரம் வெளியாகவிருக்கிறது.

இந்த படத்தை சந்தானம் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தை வாங்கி வெளியிட யாரும் முன்வராத நிலையில், சந்தானமே வெளியிட தயாரானார்.

இந்நிலையில், சந்தானத்துக்கு கைகொடுக்கும்விதமாக அவர் நடித்த ‘இனிமே இப்படித்தான்’ படத்தை உதயநிதி தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வாங்கி வெளியிடவுள்ளார்.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டின்போது சந்தானம், படங்களை தயாரிப்பதைவிட, அதை வெளியிடுவதில்தான் அதிகம் சிரமம் உள்ளது என்று தனது ஆதங்கத்தை குறிப்பிட்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries