மும்பையில் தொடங்கியது சூர்யாவின் 24 படத்தின் இரண்டாவது ஷெட்யூல்ட்

1433846802-975சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரிக்கும் மூன்றாவது படம், 24. அவரே ஹீரோவாக நடித்து வரும் இந்தப் படத்தை, யாவரும் நலம் விக்ரம் கே.குமார் இயக்குகிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

இதன் படப்பிடிப்பு ஏற்கனவே மும்பையில் தொடங்கியது. முதல் ஷெட்யூல்ட் முடிந்து சூர்யாவுக்காக சின்ன இடைவெளி விடப்பட்டது.

மாசு படத்தின் பிரமோஷன் அனைத்தும் முடிந்த நிலையில், நேற்று படத்தின் இரண்டாவது ஷெட்யூல்ட் மும்பையில் தொடங்கியது. நாசிக் உள்பட மகாராஷ்டிராவின் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்துள்ளனர்.

இரண்டாவது ஷெட்யூல்டில் ஏறக்குறைய 25 தினங்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online