தமிழ் படங்களை சப்-டைட்டிலுடன் பார்க்கும் தோனி

29aa8a5c-3e48-44cf-8c52-e0374fc285a5_S_secvpf‘காக்கா முட்டை’ சிறுவர்கள் கிரிக்கெட் வீரர் தோனியை நேரில் சந்தித்து கைகுலுக்கியதுதான் தற்போது இணையதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

‘காக்கா முட்டை’ சிறுவர்களான ரமேஷ்-விக்னேஷ் இருவருக்கும் தோனியை மிகவும் பிடிக்கும் என்பதால் அவர்களுக்கு ஆச்சர்யம் கொடுக்கும் விதமாக கடந்த சனிக்கிழமை ‘காக்கா முட்டை’ சிறுவர்கள் இருவரும் தோனியை சந்திக்க ஏற்பாடு செய்தது பாக்ஸ் ஸ்டார் நிறுவனம்.

அதன்படி, ‘காக்கா முட்டை’ சிறுவர்கள் இருவரும் தோனியை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பு மும்பையில் நடந்தது.

அப்போது சிறுவர்களுடன் ‘காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டனும் உடனிருந்தார். தோனியை சந்தித்ததும் சிறுவர்களுக்கு ஒரு புதுவித உற்சாகம் எழுந்தது. தோனியுடன் ஒரு மணி நேரம் இவர்களின் சந்திப்பு நீண்டது.

இந்த சந்திப்பின்போது, தோனிக்கு ‘காக்கா முட்டை’ படத்தின் சில காட்சிகள் சப்-டைட்டிலுடன் திரையிட்டு காண்பித்தனர். அந்த காட்சிகள் தனக்கு பிடித்திருப்பதாக தோனி அவர்களிடம் கூறினார். மேலும், சப்-டைட்டிலுடன் சில தமிழ் படங்களையும் தான் பார்த்துள்ளதாக அவர்களிடம் தோனி தெரிவித்தார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries