அஜித்துடன் சண்டை போட தயாராகும் கபீர் சிங்

05825792-3307-4dc7-a0fc-051346ddc5f7_S_secvpfஅஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும், இவரது தங்கையாக லட்சுமிமேனன் நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் உள்ள பின்னி மில்லில் நடந்து முடிந்துள்ளது. இதில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இந்த படத்தின் வில்லனாக தேர்வு செய்யப்பட்டுள்ள கபீர் சிங், அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கவுள்ளார்களாம்.

இதில் அஜித்துக்கும், கபீர் சிங்குக்கும் இடையிலான சண்டைக்காட்சிகளும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த வருடம் தீபாவளிக்கு படத்தை வெளியிட மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries