கமலுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் யூகி சேது

62fa9780-fc1c-4206-b579-7d06d66c1cc5_S_secvpf‘உத்தம வில்லன்’ படத்தைத் தொடர்ந்து கமல் நடிப்பில் ‘பாபநாசம்’, ‘விஸ்வரூபம் 2’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. இதைத்தவிர தற்போது ‘தூங்காவனம்’ படத்தில் கமல் நடித்து வருகிறார்.

இதில் கமலுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மற்றொரு நாயகியாக மதுஷாலினி நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

தற்போது இவர்களுடன் கமலின் நண்பரான யூகி சேது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே கமலுடன் ‘அன்பே சிவம்’, ‘பஞ்சதந்திரம்’ படங்களில் நடித்திருக்கிறார்.

சினிமாவை தவிர கமலும், யூகிசேதுவும் நீண்ட காலமாக நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். இவர்களுடைய கூட்டணி இப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகப்படுத்தியிருக்கிறது.

‘தூங்கவனம்’ படத்தை கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்கி வருகிறார். இப்படத்தில் கமல் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் கதையாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries