பாகுபலி படத்தின் பாடல்கள் திருட்டுத்தனமாக இன்டர்நெட்டில் வெளியீடு

649df96e-40af-4c8c-87a2-e453cdba3e3b_S_secvpfஇந்திய திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ‘பாகுபலி’. இப்படத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை ராஜமௌலி பிரம்மாண்டமாக இயக்கியிருக்கிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படமாக்கியிருக்கிறார்கள். நான்கு மொழிகளில் ஒரே நாளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்கப்பட்டு, யூடியூப்பில் அதிக பார்வையாளர் பார்த்தும் பகிர்ந்தும் வருகின்றனர்.

இரண்டு பாகமாக வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாகம் ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கு முன்னதாக இப்படத்தின் பாடல்களை ஜூன் 13ம் தேதி திருப்பதியில் பிரம்மாண்டமாக விழா நடத்தி வெளியிடவுள்ளனர்.

ஆனால் அதற்கு முன் இப்படத்தின் பாடல்களை இணையதளத்தில் திருட்டுதனமாக வெளியிட்டு உள்ளனர். மேலும் சமூக வலைதளங்களிலும் இப்படத்தின் பாடல்கள் வேகமாக பரவி வருகிறது. இதையறிந்த படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries