தனுஷ் படத்தில் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர்

f9fb14d5-c2eb-4901-82b2-c12bf58ebeda_S_secvpfதனுஷ் நடிப்பில் தற்போது ‘மாரி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்தையடுத்து தனுஷ், பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக ‘ரஜினி முருகன்’, ‘இது என்ன மாயம்’ படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார்.

மிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாராகும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கவிருக்கிறார்கள்.

இப்படத்தை ஆக்‌ஷன் கலந்த கமர்சியல் திரில்லர் படமாக உருவாக்க இருக்கிறார்கள். ஒவ்வொரு படத்திலும் ஒரு புதுமையை படைப்பாக உருவாக்கி வரும் பிரபு சாலமன் இப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் புதுமையை காண்பிக்க உள்ளார்.

இதற்காக ஹாலிவுட்டில் இருந்து புகழ்பெற்ற சண்டை பயிற்சியாளரான ரோகர் யுயன் என்பவரை வரவழைத்துள்ளார். இவர் ‘எக்ஸ்மேன்’, ‘ஷாங்காய் நூண்’, ‘பேட்மேன் பிகின்ஸ்’, ‘ஜேம்ஸ்பாண்ட் சீரியஸின் ஸ்கைபால்’ போன்ற உலக புகழ்பெற்ற படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக பணிபுரிந்தவர். இவர் இப்படத்திற்கு பெரும் பலம் என்று படக்குழுவினர் கருதுகின்றனர்.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். மகேந்திரன் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்க இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online