முதன்முறையாக சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

dd5c8007-40ad-448d-8793-489ee4b01866_S_secvpfசிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவுக்கு ‘3’ படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவின் நண்பராக நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த அனைத்து படங்களிலும் ஹீரோவாகவே நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது முதன்முறையாக ஒரு படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள கன்னட படம் வஜ்ரகயா. இப்படத்தில்தான் சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இவர் மட்டுமல்லாமல், மலையாள நடிகர் திலீப், தெலுங்கு நடிகர் ரவிதேஜா உள்ளிட்டோரும் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ஹர்ஷா என்பவர் இயக்கியுள்ளார். காருண்யா ராம் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் வருகிற 12-ந் தேதி வெளியாகவிருக்கிறது.

கன்னடத்திலும், சிறப்புத் தோற்றத்திலும் முதன்முறையாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், இதைத் தொடர்ந்து பல படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries