அமீர் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு?

205e1d58-04bc-45aa-ab4c-f8a1ba21a60d_S_secvpfசிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திலும், செல்வராகவன் இயக்கத்தில் ‘கான்’ படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இப்படங்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்துக் கொண்டிருக்கின்றன.

இவ்விரு படங்களுக்குப் பிறகு சிம்பு, அமீர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அமீர் இயக்கத்தில் கடைசியாக ‘ஆதிபகவான்’ படம் வெளியானது. இது ரசிகர்களிடையே பெரிய அளவில் பேசப்படவில்லை.

இப்படம் 2013ம் ஆண்டு வெளியானது. இப்படத்திற்கு பிறகு எந்த படத்தையும் இயக்காமல் இருந்த அமீர், தற்போது சிம்புவை வைத்து இயக்கவுள்ளதாகத் தெரிகிறது. இவர்கள் இணையும் புதிய படம் கிராமத்து பின்னணி கொண்ட கதையாக உருவாக இருக்கிறது.

அமீர் ஏற்கனவே கிராமத்து பின்னணியில் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படம் போல் இப்படமும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் உருவாகும் என்றும், இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries