கேரவேனுக்குள் நயன்தாரா–விக்னேஷ் சிவன் காதல் கும்மாளம்: இன்டர்நெட்டில் பரவும் படங்கள்

b0c82fa9-821a-4ec8-b1ec-40d7e8955c4d_S_secvpfநயன்தாராவும் டைரக்டர் விக்னேஷ் சிவனும் நெருக்கமாக இருக்கும் படங்கள் இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் என்ற படத்தை டைரக்டு செய்கிறார். இதில் நயன்தாராவும், விஜய்சேதுபதியும் ஜோடியாக நடிக்கின்றனர்.

படப்பிடிப்பில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதல் வளர்ப்பதாகவும் கூறப்பட்டது.

காதல் பரிசாக விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கி கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வந்தன.

இந்த நிலையில் இருவரும் ரகசியமாக திடீர் திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. கேரளாவில் உள்ள கிறிஸ்தவ கோவிலில் இந்த திருமணம் நடந்ததாகவும் கூறப்பட்டது.

மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாக கூறினர். இதனை விக்னேஷ் சிவன் மறுத்தார். நயன்தாராவும் இந்த திருமணத்தை உறுதிபடுத்தவில்லை.

இந்த நிலையில் தற்போது இருவரும் கேரவனுக்குள் கட்டிப்பிடித்தபடி நெருக்கமாக இருந்த படங்கள் இணைய தளங்களிலும் வாட்ஸ்அப்களிலும் பரவி வருகிறது. செல்பியில் எடுத்த இந்த இப்படங்கள் இருவரும் காதலிப்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளன என்று திரையுலக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

நயன்தாராவுக்கு இது முன்றாவது காதல் ஆகும். முதலில் சிம்புவை காதலித்தார். அது தோல்வியில் முடிந்தது. பிறகு பிரபுதேவாவை விரும்பினார். இருவரும் திருமணத்துக்கு தயாரானார்கள்.

ஆனால் கடைசி நேரத்தில் திருமணம் ரத்தாகி இந்த காதலும் முறிந்து போனது. நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்கள் காதலை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries