கோலிவுட்டின் கடவுள் அஜித்: அறிமுக வில்லன் கபீர் சிங் பாராட்டு மழை

eeb330ff-1945-4e8d-9f8a-0c6915f4b468_S_secvpfஅஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும், தங்கையாக லட்சுமிமேனன் நடித்து வருகிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை விமான நிலையம் அருகில் உள்ள பின்னி மில்லில் நடந்து முடிந்துள்ளது. இதில், அஜித், லட்சுமிமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் அஜித் மற்றும் இப்படத்தில் வில்லனாக நடிக்கும் கபீர் சிங் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள்.

கபீர் சிங், அஜித்துடன் நடித்தது குறித்து சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியான கருத்துக்களை கூறியுள்ளார்.

“அஜித்தை தற்போதுதான் சந்தித்துள்ளேன். அவர் ஒரு ஜென்டில்மேன், அற்புதமான மனிதர், வைரம் போன்றவர். நிஜ வாழ்க்கையில் ஹீரோ, ஒழுக்கத்தின் மறு உருவம், உதவுவதில் சிறந்தவர்.

அஜித்தை பொருத்தவரை இயக்குனர், கேமராமேன், லைட்மேன் படக்குழுவினர் அனைவரையும் சமமாகப் பார்க்கக் கூடியவர். அஜித் கோலிவுட்டின் பெரிய நடிகர் மட்டுமல்ல கோலிவுட்டின் கடவுளாகவும் திகழ்கிறார்.

தமிழ் சினிமாவில் பெரிய படத்தில் சிறந்த அறிமுகம் கொடுத்த கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கபீர் சிங் கூறியுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries