நயன்தாரா, அனுஷ்கா படங்கள் ரிலீசுக்கு தயார்

890a140f-e0cc-48fe-8228-ee3f16c5f089_S_secvpfநயன்தாராவின் ‘மாயா’, அனுஷ்காவின் ‘ருத்ரமாதேவி’ இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

‘மாயா’ பேய் படமாகவும் ‘ருத்மாதேவி’, யுத்த களத்தில் வீரதீரமாக சண்டை போட்டு எதிரிகளை அழிக்கும் ஒரு மகாராணியை பற்றிய படமாகவும் வருகிறது.

மாயா படத்தில் நயன்தாரா பேய் பிடித்த பெண் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சூரியும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து டப்பிங், ரீ ரிக்கார்டிங் பணிகள் நடக்கின்றன. இதன் டிசர் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

ருத்ரமாதேவி படத்தில் அனுஷ்கா மகாராணி கேரக்டரில் வருகிறார். வாள் சண்டை, குதிரை சவாரி போன்ற பயிற்சிகள் எடுத்து இதில் நடிக்கிறார். ராணா, அல்லுஅர்ஜுன், பிரகாஷ்ராஜ், நித்யாமேனன் போன்றோரும் இதில் நடிக்கின்றனர். குணசேகர் இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கில் இப்படம் வருகிறது.

இப்படத்தைதணிக்கை குழுவினர் பார்த்து எந்த காட்சியையும் வெட்டாமல் ‘யு’ சான்று அளித்துள்ளனர். இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் ஸ்டிரியோ கிராபிக் 3டி படமாக இது வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online