ரோமியோ ஜூலியட் படத்தை வீடியோ எடுத்த 3 பேர் கைது

2e32126d-f892-4a2e-94cd-eb01351d4ee7_S_secvpfகோவை பீளமேடு உடையாம்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள தியேட்டரில் ஜெயம் ரவி நடித்த ரோமியோ ஜூலியட் படம் திரையிடப்பட்டு இருக்கிறது. நேற்று காலைக்காட்சி படம் ஓடிக்கொண்டு இருந்தது.

அப்போது தியேட்டரில் சினிமா பார்த்து கொண்டு இருந்த 2 பேர் திரையில் ஓடிய படத்தை வீடியோ காமிராவில் படம் பிடித்துக் கொண்டு இருந்தனர். அருகில் இருந்த சிலர் இது குறித்து தியேட்டர் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே தியேட்டர் நிர்வாகத்தினர் பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தியேட்டருக்கு விரைந்து வந்து 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.

அவர்கள் பெயர் சுப்புராஜ், கண்ணன் என்றும் மதுரையை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. இவர்களுக்கு உதவியாக தியேட்டர் ஊழியர் செல்வம் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரையும் பிடித்தனர். மேலும் 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

இவர்கள் வீடியோ காமிரா மூலம் திரையில் படத்தை வீடியோ எடுத்து திருட்டு சி.டி. தயாரித்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. கைதான 3 பேரிடம் இருந்து லேப்டாப், வீடியோ காமிரா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online