நான் பட நாயகி விபா ரகசிய திருமணம்

05eb6dae-b2cf-4595-8ce5-22d9b62d174c_S_secvpf‘லீலை’ படம் மூலம் தமிழ் திரையுலகில் விபா அறிமுகமானார். ‘நான்’ படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடித்தார். ‘மதில்மேல் பூனை’ படத்தில் விஜய் வசந்த் ஜோடியாக நடித்தார். ‘சும்மா நச்சுன்னு இருக்கு’ என்ற படத்திலும் நாயகியாக நடித்தார். கன்னட படத்திலும் நடித்துள்ளார்.

விபாவுக்கு பெரிய படங்கள் அமையவில்லை. சமீபகாலமாக பட வாய்ப்புகளும் குறைந்து விட்டது.

இதையடுத்து அவர் திடீர் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை வைத்து ரகசியமாக இந்த திருமணத்தை முடித்துள்ளனர். மாப்பிள்ளை யார் என்ற விவரம் தெரியவில்லை.

இதுகுறித்து பேச விபாவிடம் தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. அவரது அம்மாவிடம் கேட்டபோது விபாவுக்கு திருமணம் நடந்தது உண்மை. வேறு எதுவும் சொல்ல முடியாது என்று கூறி விட்டார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online