வீட்டில் எளிமையாக பிறந்தநாள் கொண்டாடிய பிந்து மாதவி

a19ce977-e1b3-4bbd-8449-3f3b5778b165_S_secvpfதமிழில் ‘வெப்பம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிந்து மாதவி. இப்படத்தையடுத்து கிருஷ்ணாவுடன் இணைந்து ‘கழுகு’ படத்தில் நடித்திருந்தார்.

இதில் இவருடைய நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. இப்படத்தின் வெற்றிக்குப்பிறகு ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்கு ராஜா’ உள்ளிட்ட பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

காதல் கதைகளில் தொடந்து நடித்து வந்த பிந்து மாதவி ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தின் மூலம் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து துணிச்சலான பெண் அந்தஸ்தை பெற்றார்.

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தொடந்து வெற்றி படங்களில் நடித்து வரும் பிந்து மாதவி, தன்னுடைய பிறந்த நாளான இன்று வீட்டில் எளிமையாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இவருக்கு சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இவருடைய நடிப்பில் ‘ஹைக்கூ’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries