விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பாவனா

c1f488ca-61cc-407a-94d3-2f5c69bcec04_S_secvpfமலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த பாவனா தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவருடைய அழகும், நடிப்பும் தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இதனால், ‘வெயில்’, ‘தீபாவளி’, ‘கூடல் நகர்’ உள்ளிட்ட பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. தமிழில் ஆர்வம் காண்பித்து வந்த பாவனா கடைசியாக அஜித்துடன் இணைந்து ‘அசல்’ படத்தில் நடித்திருந்தார்.

இதன்பிறகு தமிழில் வாய்ப்புகள் குறையவே மீண்டும் மலையாளம் பக்கம் திரும்பினார். அங்கு பல படங்களை கைவசம் வைத்து நடித்து வந்த பாவனாவிற்கு தமிழில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. இதை அவர் தவறவிட்டிருக்கிறார்.

இதுகுறித்து பாவனா கூறும்போது, எனக்கு விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது நான் மலையாளப் படம் ஒன்றில் நடித்து வந்ததால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக தவறவிட்டேன். எனக்கு தமிழில் நடிக்க நிறைய வாய்ப்பு வந்தது.

அவை அனைத்தையும் நான் தவிர்த்துவிட்டேன். அந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டானது. அதனால் எனக்கு எந்த வருத்தமும் ஏற்படவில்லை. ஆனால் விஜய் படத்தை தவறவிட்டது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online