இன்னும் சில தினங்களில் அஜித் ரசிகர்களுக்கு கிடைக்கப் போகும் பெரிய விருந்து

8f4c837f-4ce7-42e2-94f6-2224398dff2a_S_secvpf‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு அஜித் யாருடைய இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற ஆவல் ஒவ்வொரு ரசிகர்கள் மத்தியிலும் எழுந்து வந்தது. கடைசியில் ‘வீரம்’ படத்தை இயக்கிய ‘சிறுத்தை’ சிவாவுக்கு தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தார் அஜித். இந்த படம் தற்போது தொடங்கி இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது படத்தின்மீது மேலும் எதிர்பார்ப்பை அதிகமாகியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் பொருட்டு இப்படத்திற்காக அதிக சிரத்தை எடுத்து இசையமைத்து வருகிறார் அனிருத்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் இப்படத்தின் பாடல்களை வெளியிடுவதாக படக்குழுவினர் முடிவு செய்து வைத்திருந்தனர்.

ஆனால், அஜித் படத்தில், அனிருத் இசையமைக்கும் பாடலை ரசிக்க ரசிகர்கள் இப்போதே ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். அவர்களுடைய ஆவலை பூர்த்தி செய்யும்விதமாக இன்னும் ஒருசில தினங்களில் அஜித் படத்தின் ஒரு பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த செய்தி தற்போது இணையத்தில் பரவலாக பரவி வருகிறது. அஜித் பட பாடலை கேட்பதற்கு அஜித் ரசிகர்கள் இப்போதிருந்தே ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இப்படத்தில் விநாயகர் சதுர்த்தி பின்னணி ஒரு பாடல் உருவாக இருக்கின்றது. அனேகமாக அந்தப் பாடல்தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries