பாகுபலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

77d145b2-1aff-4ca1-b4e9-87c680b68822_S_secvpfஇந்திய சினிமா வரலாற்றிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள படம் ‘பாகுபலி’. இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளார். ராஜமௌலி படத்தை இயக்கியுள்ளார்.

சரித்திர பின்னணியில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் பிரம்மாண்டத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. இந்நிலையில், நேற்று இப்படத்தின் இசை வெளியீடு மிகவும் பிரம்மாண்ட முறையில் திருப்பதியில் நடந்தேறியது.

இந்நிலையில், இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் இருந்துகொண்டே இருக்கிறது. ரசிகர்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில் இப்படத்தை வருகிற ஜூலை 10-ந் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

தமிழ், இந்தி, தெலுங்கு என ஒரே மொழிகளில், ஒரே நேரத்தில் இப்படத்தை வெளியிடவுள்ளனர். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online