விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்து: சிம்புதேவன் அறிவிப்பு

b81942f4-79d6-4d80-90b1-ae8c777d4d0b_S_secvpfவிஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். ‘நான் ஈ’ சுதீப், ஸ்ரீதேவி கபூர், அட்டக்கத்தி நந்திதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டீசரையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ந் தேதி வெளியிடுவதாக இணையதளங்களில் செய்திகள் வெளிவந்தது. இதனை இயக்குனர் சிம்புதேவன் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறும்போது, விஜய் நடிக்க, நான் இயக்கும் ‘புலி’ படத்தை எஸ்.கே.டி. பிலிம்ஸ் சார்பாக சிபு மற்றும் பி.டி.செல்வகுமார் தயாரிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை வருகிற விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ந் தேதி வெளியிடவிருக்கிறோம். இது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்கும். அவசியம் பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

விஜய் பிறந்தநாளில் அவர் நடித்த ‘புலி’ படத்தின் டீசரும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளிவருவதால் விஜய் பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு கண்டிப்பாக இரட்டிப்பு சந்தோஷம்தான்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online