கோலிவுட் நடிகர்களின் செல்வந்தர் பட்டியலில் அஜித்துக்கு முதல் இடம்

564dfc9e-b2b1-4e08-ae01-4bcd7ff61a15_S_secvpfஇந்தியாவில் வருமானம் மற்றும் செல்வாக்கு நிறைந்த 100 பிரபலங்களின் பட்டியலை ‘போர்ப்ஸ் இந்தியா’ பத்திரிகை இன்று வெளியிட்டுள்ளது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களின்படி, இந்தியாவின் மிகவும் பிரபலமான நபர் என்ற சிறப்பிடத்தை கடந்த ஆண்டு 242 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதித்துள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிடித்துள்ளார்.

202 கோடி ரூபாய் வருமானத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ள ஷாருக்கான் புகழ் அளவில் ஏழாவது இடத்தை எட்டியுள்ளார்.

இந்த பட்டியலுக்குள் வரும் தமிழ் நடிகர்களில் வருமானத்தின் அடிப்படையில் நடிகர் அஜித் 19-வது இடத்தில் இருந்தபோதும் நாடளாவிய புகழ் என்ற அடிப்படையில் 98-வது இடமே கிடைத்துள்ளது.

வருமானத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள விஜய் புகழில் 80-வது இடத்திலும், வருமானத்தில் 21-வது இடத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழ் மற்றும் செல்வாக்கில் 89-ம் இடத்திலும் இருப்பதாக ‘போர்ப்ஸ் இந்தியா’ பத்திரிகை வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries