ஜோதிகா வெளியிட்ட உப்பு கருவாடு டீசர்

5a678005-38f5-4608-8558-acb343caa21e_S_secvpf‘மொழி’, ‘அபியும் நானும்’, ‘பயணம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘உப்பு கருவாடு’. கருணாகரன், நந்திதா, எம்.எஸ்.பாஸ்கர், சதீஷ், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஸ்டீவ் வாட்ஸ் என்பவர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்த டீசரை பிரபல நடிகை ஜோதிகா வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி, இன்று காலை ஜோதிகா இப்படத்தின் டீசரை இணையதளத்தில் வெளியிட்டார்.

ஜோதிகா ஏற்கெனவே ராதாமோகன் இயக்கத்தில் ‘மொழி’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜோதிகாவுக்கு ஒரு திறமையான நடிகை என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

‘உப்பு கருவாடு’ காமெடி மற்றும் சிந்திக்கக்கூடிய கதையம்சத்துடன் உருவாகியிருக்கிறது. இப்படத்தின் தலைப்பு உருவாக்கமே அனைவரையும் ஈர்த்தது. அந்தவகையில் இந்த டீசரும் அனைவரையும் மிகவும் கவரும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries