விக்ரம்-ஹரி கூட்டணியில் உருவாகிறது சாமி 2-ம் பாகம்

4952a274-f1d2-41c1-8a52-e1b97902d10b_S_secvpfவிக்ரம்-ஹரி கூட்டணியில் வெளிவந்த ‘சாமி’ படம் இருவருக்கும் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. சாமி படத்தைத் தொடர்ந்து போலீஸ் கதையை படமாக்குவதில் வல்லவர் என்ற பெயரும் இயக்குனர் ஹரிக்கு கிடைத்தது.

இதைத் தொடர்ந்து இந்த கூட்டணி ‘அருள்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்தனர். இந்த படமும் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. தற்போது இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையப் போவதாக கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேச்சு அடிபடுகிறது.

ஏற்கெனவே ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தை ஹரி இயக்கப்போவதாக கூறியிருந்தார். ஆனால், விக்ரம் பல படங்களில் பிசியாக இருந்ததால், இந்த பணிகளை ஒத்தி வைத்திருந்தார் ஹரி.

தற்போது ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதை ரெடியாகிவிட்டதாகவும், விரைவில் இதற்கான வேலைகளை தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டாம் பாகத்திலும் விக்ரமே ஹீரோவாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

விக்ரம் தற்போது ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து ‘மர்ம மனிதன்’, ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார். அதேபோல், ஹரியும் சூர்யாவை வைத்து ‘சிங்கம்-3’ படத்தை எடுக்க முடிவு செய்துள்ளார்.

ஆகையால், இவர்கள் இருவரும் தங்கள் படங்களை முடித்துவிட்டு ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடுவார்கள் என நம்பலாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries