இன்டர்நெட்டில் பரவும் ரஜினியின் புது கெட்டப்

f6c0c032-6516-4fad-85f4-3deba5f0e51c_S_secvpfரஜினி ‘லிங்கா’ படம் ரிலீசான பின் சில மாதங்கள் ஓய்வில் இருந்தார். சமீபத்தில் கோவை சென்று தயானந்த சரஸ்வதி சாமிகளை சந்தித்தார். அங்குள்ள மடத்தில் தியானமும் செய்தார்.

இதற்கிடையில் ரஜினி நடிக்கும் புது படம் பற்றி பல்வேறு யூகங்கள் கிளம்பின. அவர் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பும் நிலவியது. ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.முருகதாஸ் என முன்னணி டைரக்டர்கள் பெயர்களும் அடிபட்டன.

ஆனால் இறுதியில் ரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க முடிவு எடுத்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. ரஞ்சித் ‘மெட்ராஸ்’ படத்தை டைரக்டு செய்து பிரபலமானவர்.

‘அட்டக்கத்தி’ என்ற படத்தையும் எடுத்துள்ளார். அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்து போனதால் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். கலைப்புலி தாணு இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு திரைக்கதை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. விரைவில் படப்பிடிப்பை துவங்க உள்ளனர். வெளிநாடுகளில் பெரும் பகுதி காட்சிகளை படமாக்குகிறார்கள்.

இந்த படத்தில் ரஜினி ‘பாட்ஷா’ படம் போல் தாதா கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜோடியாக நயன்தாரா அல்லது வித்யாபாலன் நடிப்பார் என தெரிகிறது. இதர நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.

இந்த நிலையில் ரஜினியின் புது கெட்டப் படங்கள் இணையதளங்களில் பரவி உள்ளன. ரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினி தோன்றும் கெட்டப்கள் என்று அந்த படங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

ஆனால் இது படக்குழுவினர் தரப்பில் உறுதிபடுத்தப்படவில்லை. இந்த படங்களை போலியாக சித்தரித்து வெளியிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online