ராஜ்கிரண் நடிப்பை பார்த்து அசந்துபோன சிவகார்த்திகேயன்

f1283334-cdd8-4d94-877d-241adb87dbb1_S_secvpfசிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘ரஜினி முருகன்’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், சூரி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், இயக்குனர் பொன்ராம், தயாரிப்பாளர் லிங்குசாமி உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர்.

இதில் சிவகார்த்திகேயன் பேசும்போது, “இயக்குனர் பொன்ராம் எனக்கு இப்படத்தின் டைட்டிலைத்தான் முதலில் சொன்னார். அப்புறம்தான் கதையை சொன்னார். கதையைக் கேட்டபிறகு டைட்டிலுக்கு கதை என்று கருதினேன்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்கும் ‘ரஜினி முருகன்’ படத்திற்கும் இரண்டு வேறுபாடு இருக்கிறது. அந்தப் படத்தில் வேலைக்கு போகக்கூடாது என்று இருப்போம். இப்படத்தில் வேலைக்கு போகணும்னு இருக்கிறோம். குடும்பத்தை பற்றி கொஞ்சம் சொல்லியிருக்கிறோம்.

எனக்கு தாத்தாவாக ராஜ்கிரண் நடித்திருக்கிறார். நான் சின்ன வயதில் இருந்து பிரம்மிப்பாக பார்த்த நடிகர் ராஜ்கிரண். இவர் சீரியஸ் கதாபாத்திரம் மட்டும் செய்வார், காமெடி படத்தில் என்னுடன் நடிப்பாரா என்று தயக்கம் இருந்தது.

ஆனால் என்னுடன் நடித்த பிறகு எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. சமுத்திரகனி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் இவர் வித்தியாசமான வில்லனாக இருப்பார். ரஜினி சாரோட பெயரை படத்திற்கு வைத்திருக்கிறோம். ரஜினி படம் போல் ஜனரஞ்சக படமாக இப்படம் இருக்கும்.

எங்கள் படக்குழுவுக்கு ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ படம் போல் இப்படத்தையும் ஹிட் ஆக்க வேண்டும் என்ற அழுத்தம் இருந்தது. இதையெல்லாம் தாண்டி இப்படம் சிறப்பாக வந்திருக்கிறது. குடும்பத்தோடு பார்க்கக் கூடிய படம். அனைவருக்கும் படம் பார்த்து முடித்த பிறகு பொழுதுபோக்கு படத்தை பார்த்த திருப்தி இருக்கும்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online