வடிவேலுவுக்கு செல்பி எடுக்க கற்றுக்கொடுத்த யுவராஜ்

f6329e98-e3c1-46fe-864e-eadc0c242b4c_S_secvpfதங்களை தாங்களே படம் எடுத்துக் கொள்ளும் செல்பி என்ற பழக்கம் தற்போது நடிகர், நடிகைகளிடம் அதிகரித்து வருகிறது. அவர்கள் கலந்துகொள்ளும் படப்பிடிப்பில் அவர்களுடைய மொபைல் போனிலேயே தங்களை புகைப்படம் எடுத்து அதை இணையதளங்களில் உலாவ விட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.

இந்த செல்பி மோகம் வடிவேலுவையும் விட்டு வைக்கவில்லை. இவர் தற்போது முதன்முறையாக இயக்குனர் யுவராஜ் தயாளனுடன் இணைந்து செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை யுவராஜ் தயாளன் வெளியிட்டுள்ளார்.

இப்புகைப்படம் ‘எலி’ படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் வடிவேலு போலீஸ் உடையில் நடித்தபோது எடுக்கப்பட்டுள்ளது. வடிவேலுக்கு எப்படி செல்பி எடுப்பது என்று சொல்லிக் கொடுத்தது என் வாழ்க்கையில் ரொம்பவும் தமாஷான விஷயமாக இருந்தது என்று யுவராஜ் தயாளன் கூறியுள்ளார்.

யுவராஜ் தயாளன்-வடிவேலு கூட்டணி ஏற்கெனவே ‘தெனாலி ராமன்’ என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளது. தற்போது இரண்டாவது முறையாக ‘எலி’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக சதா நடித்துள்ளார். வருகிற ஜுன் 19-ந் தேதி இப்படம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online