சந்தானம் இடத்தைப் பிடித்த சூரி

4b1c33b8-fa39-4d5d-b6a6-6d8eefbc8d95_S_secvpfசுந்தர்.சி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘அரண்மனை’. இதில் வினய், சந்தானம், ஹன்சிகா, லட்சுமிராய், ஆண்ட்ரியா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர்.சி ‘அரண்மனை’ 2-ம் பாகத்தை எடுக்க இருக்கிறார். இதில் சித்தார்த் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக திரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா நடிக்கிறார்கள். மேலும் கோவை சரளா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இவர்கள் கூட்டணியில் சூரியும் இணைந்துள்ளார்.

இதுவரை சுந்தர்.சி இயக்கிய படங்களான ‘கலகலப்பு’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘அரண்மனை’, ‘ஆம்பள’ ஆகிய படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்திருந்தார். ஆனால் ‘அரண்மனை 2’ படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் சந்தானத்தை விட்டு சூரியை நடிக்க வைத்திருக்கிறார் சுந்தர்.சி.

சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருவதால், சுந்தர்.சி படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries