தனுஷ் படத்தை இரண்டு நாளில் முடிக்கும் எமிஜாக்சன்

954568af-2cdb-42af-9bae-96f6853d733b_S_secvpf‘ஐ’ படத்தின் வெற்றி எமி ஜாக்சனை தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோயினாக்கிவிட்டது. தற்போது உதயநிதியுடன் ‘கெத்து’, தனுஷுடன் ‘விஐபி-2’, விஜய்யை வைத்து அட்லி இயக்கும் புதிய படம் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகியுள்ளார். இதில், ‘கெத்து’, ‘விஐபி-2’ ஆகிய இரு படங்களிலும் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், ‘விஐபி-2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 2 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முடியவுள்ளதாக எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் கூறும்போது, நேற்று முழுவதும் ஒரு வீட்டில் தனுஷ், அழகான சமந்தா, நான் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்ட படப்பிடிப்பு நடந்தது. இன்னும் இரண்டு நாட்களில் இதன் படப்பிடிப்பு முடிகிறது. சீக்கிரமாகவே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

‘விஐபி-2’ படத்தை வேல்ராஜ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். தனுஷ், சமந்தா, எமிஜாக்சனுடன், கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries