நயன்தாரா படத்தின் டிரைலர் நாளை வெளியீடு

df6a0183-a1b6-4717-adb1-6e4b7a034a0b_S_secvpfநயன்தாரா தற்போது ‘நானும் ரவுடிதான் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து தற்போது கார்த்திக்கு ஜோடியாக ‘கஷ்மோரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ஆரிக்கு ஜோடியாக ‘மாயா’ என்ற படத்திலும் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்தது. அந்த போஸ்டரை பார்த்த அனைவருக்கும் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்த படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ஆவலுடன் இருந்தனர்.

அவர்களுடைய ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் இப்படத்தின் டிரைலரை நாளை (ஜூன் 18) வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 2 நிமிடம் ஓடக்கூடிய இந்த டிரைலரை நாளை மாலை வெளியிடவுள்ளனர்.

‘மாயா’ படத்திற்கு ரான் யோஹான் என்பவர் இசையமைத்திருக்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரோபோ ஷங்கர், லட்சுமி பிரியா, அம்ஷத்கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online