மீண்டும் பேய் படம் இயக்கும் முயற்சியில் மர்மதேசம் நாகா

1434527046-2719பேய் படங்கள் திரையுலகை ஆக்கிரமிக்கும் முன்பு மர்மதேசம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களால் ரசிகர்களை பயமுறுத்தியவர் நாகா. பேய் படம் என்றால் நாகா என்று சொல்லுமளவுக்கு இருந்தது அவரது புகழ்.

ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆனந்தபுரத்து வீடு படத்தை இயக்கினார். தமிழ் சினிமாவில் காட்டப்பட்ட முதல் நல்ல பேய் என்று இந்தப் படத்தை சொல்லலாம். ஆனால், படம் ரசிகர்களை கவரவும் இல்லை ஓடவும் இல்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு பேய் கதையுடன் திரும்ப வந்திருக்கிறார் நாகா. இந்தமுறை பழைய தவறை செய்யாமல் ரசிகர்களை பயமுறுத்தியே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.

விரைவில் நாகாவின் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online