50 பேய்களுடன் சண்டை போடும் ஸ்ரீகாந்த் – ராய்லட்சுமி

7610fe74-b6de-40c8-a44d-05978517d8bb_S_secvpfஸ்ரீகாந்த்-ராய்லட்சுமி நடிப்பில் உருவாகி வரும் பேய் படம் ‘சவுகார்பேட்டை’. இப்படத்தை வடிவுடையான் இயக்கி வருகிறார். வடிவுக்கரசி, விவேக், அப்புக்குட்டி, கோட்டா சீனிவாசராவ், கோவை சரளா, பவர் ஸ்டார் சீனிவாசன், நான்கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஸ்ரீகாந்த் நடித்த படங்களிலேயே இந்த படம்தான் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக சென்னைக்கு அருகே உள்ள மூலக்கொத்தலம் சுடுகாட்டில் ஸ்ரீகாந்த்-ராய் லட்சுமி இருவரும் 50 பேய்களுடன் அதிரடியாக மோதும் பயங்கர சண்டைக்காட்சியை படமாக்கி வருகின்றனர்.

எட்டுக் கேமிராக்களை கொண்டு பத்து நாட்களாக இந்த சண்டை காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் படமாக்கி வருகிறார்.

இப்படத்திற்கு ஜான் பீட்டசர் இசையமைத்து வருகிறார். சீனிவாச ரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். ‘மைனா’, ‘சாட்டை’, ‘மொசக்குட்டி’ ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries