தந்தை கமலுடன் இணைந்து நடிப்பேன்: சுருதிஹாசன்

736a6922-9e1f-44ca-9533-ad1c9500c114_S_secvpfதமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் சுருதிஹாசன் பிசியாக நடிக்கிறார். அக்ஷய்குமாருடன் நடித்த கப்பார் இஸ்பேக் இந்தி படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. வெல்கம்பேக், ராக்கி ஹேன்ட்ஸம், யாரா ஆகிய இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழில் விஜய் ஜோடியாக நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. அஜித் ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

அடுத்து தந்தை கமலுடன் இணைந்து நடிக்க திட்டமிட்டு உள்ளார். ஏற்கனவே கமல் நடித்த ஹேராம் படத்தில் சுருதிஹாசன் சிறிது நேரம் வந்தார். அதன்பிறகு அவருடன் நடிக்கவில்லை.

கமலுடன் நடிப்பது குறித்து சுருதிஹாசன் கூறும் போது, என் தந்தையுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. அவருடன் நடிப்பது எனக்கு பெருமையான விஷயம். விரைவில் அது நடக்கும். இருவரும் இணைந்து நடிப்போம் என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online