50 -வது படமா? 65 ஆல்பம் போட்டுட்டியே மச்சான் – ஜீ.வி.யை கலாய்த்த ஆர்யா

1434625527-0616சக நடிகர்களுடன்தான் வாடா போடா ப்ரெண்ட்ஷிப் என்று பார்த்தால் இசையமைப்பாளர்களையும் விடவில்லை ஆர்யா. அவர்களும் இவருக்கு மச்சான்ஸ்தான்.

ஜீ.வி.பிரகாஷ் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கிறார். இது ஜீ.வி.பிரகாஷின் 50 -வது படம். இதில் தேனிசை தென்றல் தேவா ஒரு பாடல் பாடியிருக்கிறார். இது பற்றி ஜீ.வி.பிரகாஷ் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

ஜீ.வி.யின் ஐம்பதாவது படம் என்பதை கிண்டல் செய்யும்விதமாக, ஏற்கனவே நீ 65 ஆல்பங்களை வெளியிட்டு விட்டாயே மச்சான் என்று பதில் ட்வீட் செய்தார் ஆர்யா.

இதற்கு ஜீ.வி.பிரகாஷ், எங்கடா இவன் இன்னும் ஊருக்கு வரலையேன்னு பார்த்தேன். வந்திட்டியா? மலைமேல கண்டுபிடிச்ச குறிஞ்சிப்பூவை, வீட்ல கொடுத்திட்டியா என்று பதிலுக்கு கலாய்த்திருக்கிறார்.

நரசிம்மராவ் போன்றவர்களையும் பிரம்மானந்தமாக மாற்றிவிடுவார் ஆர்யா.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries