தனுஷுடன் கிரிக்கெட் விளையாடிய சிவகார்த்திகேயன்

sivakarthikeyan-dhanush-ethir-neechalதற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவருடைய படங்கள் அனைத்துமே வெற்றிப்பட வரிசையில் வந்து கொண்டிருக்கிறது.

இவருடைய இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு தனுஷ்தான் முக்கிய காரணம். தன்னுடைய படத்தில் அவரை அறிமுகம் செய்து வைத்ததோடு மட்டுமல்லாமல், தன்னுடைய தயாரிப்பில் அவரை நடிக்கவும் வைத்து அழகு பார்த்தவர் தனுஷ்.

அப்படியிருக்கையில், சமீபகாலமாக சிவகார்த்திகேயனுக்கும், தனுஷூக்கும் மோதல் போக்கு நிலவுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. சிவகார்த்திகேயனுக்கு உதவ தனுஷ் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது.

அதனாலேயே சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு சக போட்டியாளராக கருதும் விஜய் சேதுபதியை வைத்து தனுஷ் படம் தயாரிக்கிறார் என்றும் கூறப்பட்டது.

ஆனால், இவற்றையெல்லாம் சிவகார்த்திகேயன் தற்போது மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, தனுஷ் எனக்கு முக்கியமான காலகட்டத்தில் எல்லாம் நிறைய உதவிகள் செய்துள்ளார்.

அதையெல்லாம் நான் மறக்கமுடியாது. அவர் எப்போதும் என் இதயத்தில் குடியிருக்கிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புகூட, நாங்கள் இருவரும் கிரிக்கெட் விளையாடினோம்.

அவர்மீது நான் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறேன் என்று அவருக்கு தெரியும். அதேபோல், நான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கமாட்டேன் என்பதும் அவருக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online