ஜீவாவுக்கு மேலும் ஒரு புதுப்படம்

59e76c54-7620-4320-9f1f-05554e81e969_S_secvpf‘யான்’ படத்தின் தோல்விக்கு பிறகு ஜீவாவுக்கு தமிழ் சினிமாவில் சற்று இடைவெளி ஏற்பட்டது. இருப்பினும், விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க தற்போது முழு வீச்சாக களமிறங்கி பணியாற்றி வருகிறார் ஜீவா. அந்த வரிசையில் தற்போது பி.எஸ்.ராம்நாத் இயக்கத்தில் ‘திருநாள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ‘ஈ’ படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்துள்ள படம் இது. இப்படத்தில் ஜீவா ரவுடியாக நடிக்கிறார். நயன்தாரா முழுக்க முழுக்க கிராமத்து பெண்ணாகவே நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டிகே இயக்கத்தில் ‘கவலை வேண்டாம்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஜீவா ஒப்பந்தமாகியிருக்கிறார். நகுல் நடிப்பில் வெளிவந்த ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இந்தப் படத்தை இயக்க உள்ளார்.

ராம்பிரகாஷ் ராயப்பா கதையை கூறிய உடனே கதை ஜீவாவுக்குப் பிடித்துப்போனதால் உடனே ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஜீவா தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries