விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்து

Vijay-in-Puli-First-Look1விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ந் தேதி வெளியிடப்போவதாக அப்படத்தின் இயக்குனர் சிம்புதேவன் சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து ‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்க்க ஒவ்வொரு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற ஜூன் 21-ந் தேதி நடுஇரவு 12 மணிக்கு வெளியிடவுள்ளனர்.

அதைத் தொடர்ந்து 22-ந் தேதி நள்ளிரவு 12-மணிக்கு இப்படத்தின் டீசரை வெளியிடவுள்ளனர். இந்த இரண்டு நாளும் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம்தான்.

புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளனர். நான் ஈ சுதீப், ஸ்ரீதேவி கபூர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். பேண்டசி படமாக உருவாகியுள்ள இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் படமாக்கியுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online