ஆர்யாவுக்கு சைக்கிள் ரேஸ் மாரிக்கு புறா ரேஸ்

Maariஅஜீத்தால் பைக் ரேஸ் பிரபலமானது. ஆர்யாவால் சைக்கிள் ரேஸ் பற்றி பேசி வருகிறார்கள். தனுஷின் மாரி படம் வெளிவந்தால் புறா ரேஸ் குறித்தும் பேசுவார்கள்.

புறாவை பந்தயத்துக்கு விடுவது பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. பலநூறு மைல்கள் தூரத்தில் விடப்படும் புறாக்கள் குறித்த நேரத்தில் தனது இடத்தை வந்தடையும். ஊர் பக்கம் இந்த புறா ரேஸ் இப்போதும் நடக்கிறது.

மாரி படத்தில் தனுஷ் புறா ரேஸ் விடுகிறவராக வருகிறார். ஆடுகளம் சேவல் சண்டை மாதிரி இது படம் நெடுக வரும் என்று நம்பி ரசிகர்கள் ஏமாந்துவிடக் கூடாது அல்லவா.

படத்தில் புறா ரேஸ் கொஞ்சமாகதான் வரும் என்று இப்போதே அலாரம் அடிக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன்.

புறா இல்லைன்னா என்ன காஜல் அகர்வால் இருக்கிறாரே.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries