கமலின் பாபநாசம் அடுத்த மாதம் ரிலீஸ்

8764018b-574f-40de-bd55-763d8f12ea46_S_secvpfமலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய திரிஷ்யம் படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் கமல், கவுதமி ஜோடியாக நடித்து உள்ளனர்.

எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ், டெல்லிகணேஷ், ஆஷாசரத் போன்றோர் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள். ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் கேரளாவில் நடந்து முடிந்துள்ளது. இதில் கமல் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் நெல்லை தமிழ் பேசி நடிக்கின்றனர்.

இந்த படம் விரைவில் தணிக்கைக்கு அனுப்பப்படுகிறது. அடுத்த மாதம் (ஜூலை) முதல் வாரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

இந்த படம் குறித்து கமல் கூறும்போது, ‘‘பாபநாசம்’’ படத்தில் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். மூன்று மொழிகளில் ஏற்கனவே இப்படம் வெற்றி பெற்றுள்ளது. இப்போது தமிழிலும் வருகிறது.

கவுதமி சிறந்த நடிகை என்பதை இதில் நிரூபித்து உள்ளார். நல்ல படத்தை எடுத்துள்ளோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. திறமையானவர்கள் ஒன்று கூடி இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். படம் பார்க்கிற எல்லோரது மனதிலும் இந்த படம் ஆழமாக பதியும் என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online