ஆன்ட்டி என அழைத்து அவமதிப்பதா?: ரசிகர் மீது சுவாதி பாய்ச்சல்

3dcedb5d-5055-466b-95b1-53b0e2a75e84_S_secvpfசுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழில் சுவாதி கதாநாயகியாக அறிமுகமானார். போராளி, வடகறி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘அமளிதுமளி’, ‘யட்சன்’ படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் செல்பியில் எடுத்த தனது படமொன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அப்படத்தில் புடவை கட்டி இருந்தார். அது முதிர்ச்சியான தோற்றத்தை போல் அவரை காட்டியது.

இதனை ரசிகர் ஒருவர் கிண்டலடித்தார். பார்ப்பதற்கு ஆன்ட்டி போல் இருக்கிறீர்கள். இது போன்ற படங்களை சமூக வலைத்தளத்தில் போடாதீர்கள் என்று கருத்து பதிவு செய்தார்.

இது சுவாதிக்கு ஆத்திர மூட்டியது. அந்த ரசிகனை கண்டித்து சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டார்.

அவர் கூறும்போது, ‘‘கலர் சுவாதியாக நான் எப்போதுமே இருக்க முடியாது. எனவே உங்கள் இலவச ஆலோசனைக்கு நன்றி ‘அங்கிள்’.

நான் பார்த்து வளர்ந்த ஆன்ட்டிகள் எல்லோருமே சிறந்த பெண்கள். எடை கூடி ஆன்ட்டியாக தெரிந்தால் அதற்காக கவலைப்படப் போவது இல்லை. உங்கள் கருத்தை பாராட்டாகவே எடுத்துக்கொள்கிறேன்’’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online