ருத்ரம்மாதேவி வெளியீட்டு தேதி திடீர் மாற்றம்

1415004539-9816பெரிய படங்களுக்கு ஏற்படும் சறுக்கல்தான் ருத்ரம்மாதேவிக்கு ஏற்பட்டுள்ளது.

இயக்குனர் குணசேகரின் பிரமாண்ட சரித்திரப் படமான ருத்ரம்மாதேவி அதிக கவனத்தை பெற்றிருக்க வேண்டிய படம். துரதிர்ஷ்டவசமாக இந்த நேரத்தில்தான் ராஜமௌலியின் பாகுபலியும் வெளியாகவிருக்கிறது.

அதனால் ஊடகம் மற்றும் ரசிகர்களின் கவனம் பாகுபலியை நோக்கி குவிந்துள்ளது.
ருத்ரம்மாதேவி ஜுன் 26 வெளியாகும் என அறிவித்திருந்தனர்.

இப்படம் 3டி யில் வெளியாகிறது. அதற்கான தொழில்நுட்ப வேலைகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. அதனால் ஜுன் 26 படம் திரைக்கு வராது என கூறப்படுகிறது.

ஜுலை 10 பாகுபலி வெளியாகிறது. அந்தப் படம் கணிசமான திரையரங்குகளில் திரையிடப்படும் என்பதால் ருத்ரம்மாதேவி ஜுலை இறுதிக்கு தள்ளிப் போகலாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online