சிம்பு-தனுஷ் மீண்டும் மோதல்

9592f064-0d2f-4586-8728-febeb1dda345_S_secvpfசிம்புவும், தனுஷும் ஒருகாலத்தில் சினிமாவில் எதிரும்-புதிருமாக இருந்தனர். தனுஷ் வசனத்தை கிண்டல் செய்து, சிம்பு தனது படத்தில் வசனம் வைப்பது, அதேபோல், சிம்பு படத்தில் வரும் வசனத்தை தனுஷ் கிண்டல் செய்வது போன்று அவரவர் படங்களில் ஒருவரையொருவர் தாக்கி பேசி மோதல் போக்கை கடைபிடித்து வந்தனர். இது இவர்களது ரசிகர்களிடையேயும் பெரும் பகையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவரும் வெளிநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றாக கலந்துகொண்டனர். அந்த விழா மேடையில் இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து, தங்களுக்கு எந்த சண்டையும் இல்லை என்று அறிவித்தார்கள்.

அன்றுமுதல், இன்றுவரை இருவரும் தங்கள் படங்களில் ஒருவரையொருவர் தாக்கிப் பேசுவதும் இல்லை. சினிமா நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக கலந்துகொள்கிறார்கள்.

இந்நிலையில், தற்போது இவர்களுக்குள் மீண்டும் மோதல் உருவாகியிருக்கிறது. அதாவது, சிம்பு தற்போது ‘வாலு’ படத்தை வருகிற ஜூலை 17-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

அதேபோல், தனுஷ் தன்னுடைய நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மாரி’ படத்தையும் ஜூலை 17-ந் தேதியே வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதனால், இருவரும் மீண்டும் மோத தயாராகி இருக்கிறார்கள்.

இவர்களுடைய இந்த மோதல் தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும் என்பதே சினிமா ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries