பாபநாசம் படத்திற்கு யு சான்றிதழ்

ojpmD4jifhdfj_mediumகமல் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘பாபநாசம்’. மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘திரிஷ்யம்’ படத்தின் ரீமேக்தான் ‘பாபநாசம்’.

இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக கவுதமி நடித்துள்ளார். கிட்டத்தட்ட 25 வருட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் நடித்துள்ளார் கவுதமி. மேலும், நிவேதா தாமஸ், எஸ்தர், கலாபவன் மணி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

‘திரிஷ்யம்’ படத்தை மலையாளத்தில் இயக்கிய ஜீது ஜோசப் இப்படத்தையும் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு சான்றிதழ் பெறுவதற்காக படம் தணிக்கை குழுவினருக்கு அனுப்பப்பட்டது.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் எந்தவொரு காட்சியையும் வெட்டாமல் ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். குடும்பத்தினருடன் அனைவரும் ரசிக்கக்கூடிய படமாக எடுத்ததற்கு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

‘பாபநாசம்’ படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்தது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. விரைவில் படத்தை வெளியிட தீவிரமாக களமிறங்கவுள்ளனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries