வானமே கிட்ட வருதே… வானவில் வட்டமாகுதே…

இது புலி படத்தில் விஜய் பாடியிருக்கும் பாடல். தனது படங்களில் பாடுவதை ஒரு வழக்கமாக்கியிருந்தார் விஜய். சில வருடங்களுக்கு முன் அந்த வழக்கத்தை அவர் கைவிட்டார். தான் நடிக்கும் படங்களில் அவர் பாடுவதில்லை.

துப்பாக்கிப் படத்தில், கூகுள் கூகுள் பாடலை பாடிய பிறகு மீண்டும் பாட ஆரம்பித்தார். புலியிலும் அது தொடர்கிறது. தேவி ஸ்ரீபிரசாத் இசையில், வானமே கிட்ட வருதே எனத் தொடங்கும் பாடலை விஜய் பாடினார். இது குறித்து தனது ஆச்சரியத்தை சிம்புதேவன் பதிவு செய்துள்ளார்.

“விஜய் சிறந்த பாடகர். குறிப்பிட்ட பாடலை அவர் ஒரு மணி நேரத்தில் பாடி பதிவு செய்தார். இதுவே அவர் சிறந்த பாடகர் என்பதற்கான சான்று” என தெரிவித்துள்ளார்.

புலி, விநாயகர் சதுர்த்தி அன்று திரைக்கு வருகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries