விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசைப்படும் ஜெய்

1404391311_kanimozhi-vijay-jaiதமிழ் சினிமா உலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகரில் ஒருவர் ஜெய். இவர் விஜய் நடிப்பில் வெளியான ‘பகவதி’ படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்திருந்தார். இதுதான் அவருக்கு முதல் படம். இப்படத்திற்குப் பிறகு ஜெய்க்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

தற்போது பிசியாக நடித்து வரும் ஜெய், மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, பின்னர் மீண்டும் விஜய் அண்ணாவுடன் இணைந்து ஒரு படம் நடிக்க ஆசை இருப்பதாக கூறியிருக்கிறார்.

சமீபத்தில் ஜெய், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாஸ்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும், ‘அர்ஜூனன் காதலி’, ‘புகழ்’ ஆகிய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online