சிம்பு தனுஷால் சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட பிரச்சனை

19-1434696779-dhanush-simbu-sivaart-1600சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘ரஜினி முருகன்’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

மேலும் ராஜ்கிரண், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கியிருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களின் அதிக ஆதரவை பெற்று வரும் நிலையில் இப்படத்தை ஜூலை 17ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர். இதே தேதியில் தனுஷின் ‘மாரி’ படமும், சிம்புவின் ‘வாலு’ படமும் வெளியாக இருக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சிம்பு, தனுஷ் படங்கள் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதே தேதியில் சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ படமும் வெளியானால் தியேட்டர் பிரச்சனை ஏற்பட இருப்பதால் இப்படத்தை அகஸ்ட் மாதம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries