உள்நாட்டுப் படங்களை மிஞ்சி வசூல் சாதனை செய்த ஜூராசிக் வேர்ல்டு

ydln1orxqd4neeasubooஉலகில் இதுவரை யாரும் பார்த்தே இருக்காத ஒரு உயிரினம் ஸ்கூல் பேக் முதல் வீடியோ கேம் வரை எல்லாவற்றிலும் இடம்பெற்றுள்ளது என்றால், அது நிச்சயம் ஜூராசிக் பார்க் படத்தில் வந்த டைனோசராக மட்டுமே இருக்கும்.

ஜூராசிக் பார்க் பட வரிசையில் 4-வது படமாக வெளியான ‘ஜூராசிக் வேர்ல்டு’ உலகளவில் பல வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய பிராந்திய மொழிகளில், 2,108 திரையரங்குகளில் இந்த படம் வெளியானது.

திரையிடப்பட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தின் மாஸ் நடிகருக்கு கிடைக்கும் வரவேற்புக்கு சற்றும் குறைவில்லாத வரவேற்பைப் பெற்றது ‘ஜூராசிக் வேர்ல்டு’. குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வந்து ரசிகர்கள் இந்த திரைப்படத்தை கொண்டாடினர்.

இந்த படம் இந்தியாவில் வெளியாகி 3 வாரங்கள் ஆகியுள்ள நிலையில், ரசிகர்களின் அமோக ஆதரவினால் இதுவரை இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக யுனிவர்சல் பிக்சர்ஸ் இந்தியா அறிவித்துள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online