காந்தி ஜெயந்தியை குறி வைக்கும் விக்ரமின் 10 எண்றதுக்குள்ள

1432187414-9618தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, காந்தி ஜெயந்தி என 10 நாள்களை பட்டியலிட்டு தந்துள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம்.

இந்த 10 தினங்களில்தான் மாஸ் நடிகர்களின் படங்களை வெளியிட வேண்டும். விதிமுறை என்னவென்றால், படத்தின் பட்ஜெட் 15 கோடியை தாண்டினாலே, இந்த பத்து தினங்களில் ஒன்றில்தான் படத்தை வெளியிட்டாக வேண்டும்.

மற்ற நாள்கள் சின்னப் படங்களுக்கானவை.
விக்ரம் நடித்து வரும், 10 எண்றதுக்குள்ள முடியும் நிலையில் உள்ளது. இந்தப் படத்தை அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியை வேறு படங்கள் ஏற்கனவே ஆக்கிரமித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்தப் படத்தில் விக்ரமுடன் பசுபதி, சமந்தா நடிக்கின்றனர். சமந்தாவுக்கு இதில் இரண்டு வேடங்கள் என்பது முக்கியமானது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries