ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற மாரி டிரைலர்

ET00027651தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘மாரி’. இதில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் ரோபோ சங்கர், விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ‘வாயை மூடி பேசவும்’ படத்தை இயக்கிய பாலாஜி மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியானது. ரசிகர்களின் ஆரவார வரவேற்பினைத் தொடர்ந்து இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது.

இதுவும் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் அதிக பகிர்வு மற்றும் பார்வையாளர்களை கொண்டுள்ளது.

தனுஷ் லோக்கல் தாதாவாக நடித்திருக்கும் இப்படம் ஜூலை மாதம் 17ம் தேதி வெளியாகவுள்ளது. இதே தேதியில் சிம்புவின் ‘வாலு’ படமும் வெளியாகவுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிம்பு, தனுஷ் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் கடும் போட்டி இருக்கும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online