விஜய் சேதுபதி தயாரித்த ஆரஞ்சு மிட்டாய் ரிலீஸ் தேதி அறிவிப்பு

orange-mittai1-540x320பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகியுள்ளார். இதில் இவரே கதாநாயகனாகவும் நடித்து வந்தார். இதில் வயது முதிர்ந்தவராக வரும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.

இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் கடந்த வருடமே வெளியானது. வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்த டீசர் அனைவராலும் வரவேற்கப்பட்டது. படம் எப்போது வெளியாகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது நல்ல செய்தி கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படத்தை ஜூலை மாதம் 31ம் தேதி வெளியிடப்பதாக அறிவித்திருக்கிறார். அதற்கு முன்னதாக இப்படத்தின் பாடல்களை ஜூலை 1ம் தேதி வெளியிடவுள்ளனர்.

டீசரால் ரசிகர்களை கவர்ந்த விஜய் சேதுபதி பாடல்கள் மற்றும் படத்தின் மூலம் ரசிகர்களை மேலும் கவர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online